tamil

கடந்த காலம் கடப்போம் வா!

இளைத்த இடையும்,
முளைத்த பருவும்,
கொட்டிய முடியும்,
போன பருவமும்,
பேசுவோம் வா!

காத்திருந்த விடுமுறையும்,
கண்டு கழித்த படங்களும்,
காணாத காரியங்களை
ஒருமுறை கண்டுவிடுவோம் வா!

தொலைத்த பேனாக்களையும்,
மறைத்த பிட்டுகளையும்,
மறைந்த நோட்டுகளையும்,
தேடி அலைவோம் வா!

தேய்த்த பெஞ்சுகளும்,
தேயாத நினைவுகளையும்,
தோண்டி எடுப்போம் வா!

வீண்கதை அளந்து,
சண்டை வளத்து,
சட்டை கிழித்து,
சமாதானம் ஆவோம் வா!

சாகசம் புரிந்து,
சிறந்தவர் நாமே
என்று மார்தட்டுவோம் வா!

நடுநிசியில் சமைப்போம் வா!
கூட்டான்சோறு உண்போம் வா!
சட்டை மாத்தி அணிவோம் வா!
சந்தில் சிந்து இசைப்போம் வா!
மனம் போன போக்கில் அலைவோம் வா!
மனதார மகிழ்வோம் வா!
வாய்விட்டு சிரிப்போம் வா!
கடந்த காலத்தை மீண்டும் கடப்போம் வா!

2 thoughts on “கடந்த காலம் கடப்போம் வா!”

Leave a reply to Raghavi Devaraj❤ Cancel reply