Poems, tamil

அளிப்பீரோ? அழிப்பீரோ ?

வெறும் சாயம் என்று உதாசீனம் செய்யும்குருடர்களுக்கு வரைகிறோம்;வெறும் கிறுக்கல் என்று கேட்காமல் செல்லும்செவிடர்களுக்கு கவிதை படைக்கிறோம்;கால் நோக ஆடுகிறோம்;மூச்சு அடைக்க பாடுகிறோம்;ரேகை தேய தாளம் இசைகிறோம்;அழகாய் சிற்பம் செதுக்குகிறோம்;அறிவாய் நுட்பம் புகுத்துகிறோம்;வளர்பிறைக்குப்பின் தேய்பிறையோ?கலைஞன் மட்டும் விதிவிலக்கோ?களை நீக்கினால் பயிர் ஓங்கும்,கலை நீக்கினால் எங்கள் உயிர் நீங்கும்!பொழுதுபோக்கு உமக்கு;பொன்னான வாய்ப்பு எமக்கு;உம் சட்டைப்பை பணம் வேண்டாம்…மனமார ஒரு கைத்தட்டல் போதும்!அளிப்பீரோ?அழிப்பீரோ ?

Poems, Read & Relax

Dear Gossip-Monger

Stop acting so cheap,Restrain from what you speak!You sniff around houses,Their conversations,Make your own assumptions,Of their relation,He Hooks-up…She broke-up…They Screw-up…Stop the mess-up,For you have already Fucked-up!Your half-spoken truthAre just a match stickWith a capacity to burnLush forest quick!To all the rumor-monger,Scuttlebutt slander,Workless chit-chatter,For you, To gossip is to natter,Remember, for meYour opinion doesn't matter!

Read & Relax

வெற்றி!

தீண்டாமையை தீண்டிடு,தீயென எரித்திடு,தீமை அதை புறந்தள்ளுதிறமை அதன் துணைக்கொண்டு! ஏழ்மை அதை மிதித்திடு,எரிமலை என வெடித்திடு,எட்டுத்திக்கும் தேடிடு,ஏற்றம் உண்டு ஏறிடு! கண்ணீரில் ஓடம்மிதந்ததுபோதும்,பாற்கடல் உனக்கு,போடிடு துடுப்பு,எடுத்த எடுப்புமுடித்திடு இறைவன்போட்ட கணக்கு! சரி என வகுத்தவன் யார்?தவறென பிரித்தவன் யார்?விடியாத காலை உண்டோ?முடியாத செயலும் உண்டோ? தட்டிக்கொடுத்து,கட்டியணைத்து,நித்தம் உழைத்து,வெற்றி பெருக்கு!

Poems, tamil

கிறுக்க(ன்)ல்

மழைத்துளி பூவிதழில் தங்குமோ? மழலை மொழி புரியுமோ? அத்திமலர் தினம் பூக்குமோ? ஆகாயத்தாமரை குளத்தில் மூல்குமோ? பரிசல் கடல்கடக்குமோ? பாசக்கயிறு நிக்குமோ? ஏழைப்பசி தணியுமோ? ஏக்கம் மலையேறுமோ? பட்டாம்பூச்சி மேகம் தாண்டுமோ? மேகம்தான் ஒர் இடத்தில் நிலைக்கொள்ளுமோ? உடைந்த கண்ணாடி இணையுமோ? கூழாங்கல் மிதக்குமோ? கூட்டான்சோறு கசக்குமோ? உன்நினைவுதான் மறையுமோ?

tamil

கடந்த காலம் கடப்போம் வா!

இளைத்த இடையும்,முளைத்த பருவும்,கொட்டிய முடியும்,போன பருவமும்,பேசுவோம் வா! காத்திருந்த விடுமுறையும்,கண்டு கழித்த படங்களும்,காணாத காரியங்களைஒருமுறை கண்டுவிடுவோம் வா! தொலைத்த பேனாக்களையும்,மறைத்த பிட்டுகளையும்,மறைந்த நோட்டுகளையும்,தேடி அலைவோம் வா! தேய்த்த பெஞ்சுகளும்,தேயாத நினைவுகளையும்,தோண்டி எடுப்போம் வா! வீண்கதை அளந்து,சண்டை வளத்து,சட்டை கிழித்து,சமாதானம் ஆவோம் வா! சாகசம் புரிந்து,சிறந்தவர் நாமேஎன்று மார்தட்டுவோம் வா! நடுநிசியில் சமைப்போம் வா!கூட்டான்சோறு உண்போம் வா!சட்டை மாத்தி அணிவோம் வா!சந்தில் சிந்து இசைப்போம் வா!மனம் போன போக்கில் அலைவோம் வா!மனதார மகிழ்வோம் வா!வாய்விட்டு சிரிப்போம் வா!கடந்த காலத்தை… Continue reading கடந்த காலம் கடப்போம் வா!

tamil

“மை”யல்கொண்டேன்

மைல்கள் தாண்டிவர தோன்றுமே,உன் மையல்முகம்காணத்தானே! கண்கள் மறைக்கும்உண்மையை,உன் கண்மைகாட்டிக்கொடுக்குமே! அழகாய்தீட்டி இருந்தால்,வர்ணனைஎதிர்பார்க்கிறாள்என்பேனோ… அளவாய்தீட்டி இருந்தால் ,சட்டென்று முடியும் சந்திப்புஎன்பேனோ… கண்மை கொஞ்சம்கீழே அழிந்திருந்தால்,வேலைப்பழுதலைக்கு மேலேஎன்பேனோ… கன்னம் வரைநீண்டு இருந்தால்,உன் அழுகைக்கான காரணம் கண்டுப்பிடிப்பேனோ… கண்டதும் கண்ணீர்கண்ணை நனைத்தால்உன் உள்ளம்சொல்ல துடிப்பதைகேட்பேனோ… தீட்டிய மைதெரியாதவாறுஇமை மூடினால்,உன்வெட்கம்அதை ரசிப்பேனோ… உன் "மை"சொல்லுதடிஉண்மையை… பகலெல்லாம்ஒட்டி ஒட்டி உறவாடிஇரவெல்லாம்கட்டியணைக்கும்,உன் இமைக்குமையாய் என்னையும் பூசிக்கொள்ளமாட்டாயோ?

tamil

கர்வம் கொஞ்சம் தலைக்கு ஏறட்டுமே!

இந்தப் பதிப்பை இப்பொழுது நான் எழுதுவதற்கு சமீப காலமாக நான் படிக்கும் புத்தகங்கள் காரணமாய் இருக்கலாம், அல்லது மொழியின் மீதான ஈர்ப்பாக இருக்கலாம், அதனை அனைவரும் அறியச் செய்யவேண்டும் என்ற ஆர்வம் ஆக இருக்கலாம்,அல்லது ஒற்றவை ஒற்றவையே இழுக்கும் என்ற ஈர்ப்பு விதியின் நியதியாக கூட இருக்கலாம். இந்த பதிப்பு உங்களைக் கண்ணீர் கடலில் மல்க செய்யுமா? கற்பனையில் ஆத்துமா? ஆச்சரிய வானத்தில் பறக்க வைக்குமா? என்பதை எல்லாம் அறியேன். ஆனால் டால்கோனா காபி குடித்து விதவிதமாக… Continue reading கர்வம் கொஞ்சம் தலைக்கு ஏறட்டுமே!

Poems

அன்புள்ள அலோ…

This poem portraits the beauty of village!