Poems

அன்புள்ள அலோ…

அலைபேசி எடுத்து
ஹலோ என்பதற்கும்
அலோ என்பதற்கும்
அர்த்தங்கள் ஆயிரம் உண்டு!

நாகரீக ஹலோவில்
இல்லாத நம்பிக்கை
அந்த பட்டிக்காட்டு
அலோ ஊட்டும்!

நடமாடும் தெய்வங்களும்
‘சொல்லு சாமி’
என்று அழைக்கும்
அழகிய அவலம்
அலோவில் மட்டும்!

அலோ…
என்று தொணி இழுத்தால்
இன்றைய உரையாடலும்
மணிக்கணக்கில் இழுக்கும்
என்று அர்த்தம்!

அலொ?
என்று சட்டென்று முடிந்தால்
காட்டில் வேலை
ஏராளம் இருக்குனு
பின்னே அழை
என்று அர்த்தம்!

அலோ…
என்று பேசிக்கொண்டே
நீ மூக்கு சிந்தையில்
தாளிக்கும் வாசம்
என் மூக்கை
துளைப்பது ஏனோ?

அலோ…
என்று பேசிக்கொண்டே
ஆத்தங்கரையில்
நீ தொவைக்கயில்
மீன்கள் என் கால்
வெடுப்பை
உண்பது ஏனோ?

அலோ…
என்று ஆட்டுக்கொட்டாயில்
நீ செல்லுகையில்
ஆட்டுக்குட்டியாய்
என் மனம்
துள்ளுவது ஏனோ?

அலோ…
என்று நீ பேசுகையில்
பின்னாடி குயில் பாடினால்
ஆலமரத்தில்
என் மனம் ஊஞ்சல்
ஆடுவது ஏனோ

அலோ…
என்று நீ பேசுகையில்
பொக்கைவாய் கிழவியின்
வறட்டு இருமல்
சத்தம் கேட்டால்
வெற்றிலை வாங்க
என் கால்கள்
ஓடுது ஏனோ?

ஓடி வந்து
அலோ…சொல்லிட்டு
என்குரல் கேட்டு
அத்தை மகள்
வெக்கப்படுகையில்
என் முகம்
சிவப்பது ஏனோ?

கொஞ்சம் மெதுவாய்
களைப்பில் அப்பா
அலோ…
சொல்லயில் ஊர்வரை
உயிர் வர
துடிப்பது ஏனோ?

மண்வாசம் துறந்து
சாக்சின் துர்நாற்றம்
நுகர்வது ஏனோ?

அலோவின் பாசத்தை
அளக்க முடியாதது
ஏனோ?

ஹலோவின் வஞ்சகத்தை கணிக்கமுடியாதது
ஏனோ?

1 thought on “அன்புள்ள அலோ…”

  1. கிராமத்து வாழ்க்கையும், தாய் தந்தை பாசமும் கண் முன்னே வந்து செல்கின்றன!

    Liked by 1 person

Leave a reply to Dnu Cancel reply