Poems, tamil

அளிப்பீரோ? அழிப்பீரோ ?

வெறும் சாயம் என்று உதாசீனம் செய்யும்குருடர்களுக்கு வரைகிறோம்;வெறும் கிறுக்கல் என்று கேட்காமல் செல்லும்செவிடர்களுக்கு கவிதை படைக்கிறோம்;கால் நோக ஆடுகிறோம்;மூச்சு அடைக்க பாடுகிறோம்;ரேகை தேய தாளம் இசைகிறோம்;அழகாய் சிற்பம் செதுக்குகிறோம்;அறிவாய் நுட்பம் புகுத்துகிறோம்;வளர்பிறைக்குப்பின் தேய்பிறையோ?கலைஞன் மட்டும் விதிவிலக்கோ?களை நீக்கினால் பயிர் ஓங்கும்,கலை நீக்கினால் எங்கள் உயிர் நீங்கும்!பொழுதுபோக்கு உமக்கு;பொன்னான வாய்ப்பு எமக்கு;உம் சட்டைப்பை பணம் வேண்டாம்…மனமார ஒரு கைத்தட்டல் போதும்!அளிப்பீரோ?அழிப்பீரோ ?

Poems, tamil

கிறுக்க(ன்)ல்

மழைத்துளி பூவிதழில் தங்குமோ? மழலை மொழி புரியுமோ? அத்திமலர் தினம் பூக்குமோ? ஆகாயத்தாமரை குளத்தில் மூல்குமோ? பரிசல் கடல்கடக்குமோ? பாசக்கயிறு நிக்குமோ? ஏழைப்பசி தணியுமோ? ஏக்கம் மலையேறுமோ? பட்டாம்பூச்சி மேகம் தாண்டுமோ? மேகம்தான் ஒர் இடத்தில் நிலைக்கொள்ளுமோ? உடைந்த கண்ணாடி இணையுமோ? கூழாங்கல் மிதக்குமோ? கூட்டான்சோறு கசக்குமோ? உன்நினைவுதான் மறையுமோ?