தீண்டாமையை தீண்டிடு,
தீயென எரித்திடு,
தீமை அதை புறந்தள்ளு
திறமை அதன் துணைக்கொண்டு!
ஏழ்மை அதை மிதித்திடு,
எரிமலை என வெடித்திடு,
எட்டுத்திக்கும் தேடிடு,
ஏற்றம் உண்டு ஏறிடு!
கண்ணீரில் ஓடம்
மிதந்ததுபோதும்,
பாற்கடல் உனக்கு,
போடிடு துடுப்பு,
எடுத்த எடுப்பு
முடித்திடு இறைவன்
போட்ட கணக்கு!
சரி என வகுத்தவன் யார்?
தவறென பிரித்தவன் யார்?
விடியாத காலை உண்டோ?
முடியாத செயலும் உண்டோ?
தட்டிக்கொடுத்து,
கட்டியணைத்து,
நித்தம் உழைத்து,
வெற்றி பெருக்கு!