Poems, tamil

கிறுக்க(ன்)ல்

மழைத்துளி
பூவிதழில்
தங்குமோ?

மழலை மொழி
புரியுமோ?

அத்திமலர்
தினம்
பூக்குமோ?

ஆகாயத்தாமரை
குளத்தில்
மூல்குமோ?

பரிசல்
கடல்கடக்குமோ?

பாசக்கயிறு
நிக்குமோ?

ஏழைப்பசி
தணியுமோ?

ஏக்கம்
மலையேறுமோ?

பட்டாம்பூச்சி
மேகம்
தாண்டுமோ?

மேகம்தான்
ஒர் இடத்தில்
நிலைக்கொள்ளுமோ?

உடைந்த
கண்ணாடி
இணையுமோ?

கூழாங்கல்
மிதக்குமோ?

கூட்டான்சோறு
கசக்குமோ?

உன்நினைவுதான்
மறையுமோ?

Leave a comment