tamil

“மை”யல்கொண்டேன்

மைல்கள் தாண்டி
வர தோன்றுமே,
உன் மையல்முகம்
காணத்தானே!

கண்கள் மறைக்கும்
உண்மையை,
உன் கண்மை
காட்டிக்கொடுக்குமே!

அழகாய்
தீட்டி இருந்தால்,
வர்ணனை
எதிர்பார்க்கிறாள்
என்பேனோ…

அளவாய்
தீட்டி இருந்தால் ,
சட்டென்று முடியும் சந்திப்பு
என்பேனோ…

கண்மை கொஞ்சம்
கீழே அழிந்திருந்தால்,
வேலைப்பழு
தலைக்கு மேலே
என்பேனோ…

கன்னம் வரை
நீண்டு இருந்தால்,
உன் அழுகைக்கான காரணம் கண்டுப்பிடிப்பேனோ…

கண்டதும் கண்ணீர்
கண்ணை நனைத்தால்
உன் உள்ளம்
சொல்ல துடிப்பதை
கேட்பேனோ…

தீட்டிய மை
தெரியாதவாறு
இமை மூடினால்,
உன்வெட்கம்
அதை ரசிப்பேனோ…

உன் “மை”
சொல்லுதடி
உண்மையை…

பகலெல்லாம்
ஒட்டி ஒட்டி உறவாடி
இரவெல்லாம்
கட்டியணைக்கும்,
உன் இமைக்கு
மையாய் என்னையும் பூசிக்கொள்ளமாட்டாயோ?

Leave a comment