tamil

கர்வம் கொஞ்சம் தலைக்கு ஏறட்டுமே!

இந்தப் பதிப்பை இப்பொழுது நான் எழுதுவதற்கு சமீப காலமாக நான் படிக்கும் புத்தகங்கள் காரணமாய் இருக்கலாம், அல்லது மொழியின் மீதான ஈர்ப்பாக இருக்கலாம், அதனை அனைவரும் அறியச் செய்யவேண்டும் என்ற ஆர்வம் ஆக இருக்கலாம்,அல்லது ஒற்றவை ஒற்றவையே இழுக்கும் என்ற ஈர்ப்பு விதியின் நியதியாக கூட இருக்கலாம். இந்த பதிப்பு உங்களைக் கண்ணீர் கடலில் மல்க செய்யுமா? கற்பனையில் ஆத்துமா? ஆச்சரிய வானத்தில் பறக்க வைக்குமா? என்பதை எல்லாம் அறியேன். ஆனால் டால்கோனா காபி குடித்து விதவிதமாக சமைத்து மீம்ஸ்யில் வலம், வந்து குறைகூறி, வலைதளங்களில் பொழுதை கழித்து,காதல் மடல் எழுத மூளையை சலவை செய்யும் இளையோர் மத்தியில் தமிழின் மீதான என் காதலை வெளிப்படுத்த இதை சந்தர்ப்பம் ஆக்கிக் கொண்டேன் என்பது உண்மை.

அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற சுவாரஸ்யத்தில் இயங்கும் இந்த உலகத்தில் காலத்தை கொஞ்சம் பின்னே திரும்பிப் பார்த்தேன், பின்னே தள்ளி பார்த்தேன் , தோண்ட தோண்ட தொன்மையும் பழமையும் செம்மையும் அகழ்வாராய்ச்சியில் அகப்படுவது போல ஏனோ கர்வமும் என்னுள் அகப்பட்டு விட்டது. இதோ பகிர்கிறேன் நீங்களும் கொஞ்சம் தலைக்கு ஏற்றிக் கொள்ளுங்கள்!

வேதங்களும் புத்தகங்களும் பல படித்த ஞானி அல்ல நான், கவிதை தொகுப்புகளை தொகுத்து மலர் மாலை சூட்டிய கவிஞனும் அல்ல, இருந்தாலும் சிறந்த புத்தகங்களை எப்படியேனும் படித்து விட வேண்டும் என்ற ஆர்வம் மனதில் என்றும் ஒளிர்கிறது, செவியில் ஒலிக்கிறது. மகிழ்ச்சியும் அறிவும் பகிரப் பகிர பெருகுமாம் இதோ பெருகட்டும் வெள்ளமாய்.

துருவ நட்சத்திரம் கேள்விப்பட்டிருப்பீர்கள், ஆனால் நான் இங்கு பதிக்க விரும்புவது மற்ற விண்மீன்கள் இடம் மாறும் ஏன் சந்திரனும் தேயும், ஆனால் போலாரிஸ் ஸ்டார் எனும் துருவ நட்சத்திரம் மட்டும் இடம்பெயராது, இதனால்தான் ஈழத்தை துருவ நட்சத்திரத்தின் துணைகொண்டு கடல்கடந்து வென்றனர் தமிழர். போர் புரியும் இடத்தில் அந்த ஊர் வளங்களை சூறையாடுவது, உணவு மற்றும் பிற பொருட்களை அங்கிருந்தே எடுத்துக் கொள்வதுதான் வழக்கம். ஆனால், தமிழர் அப்பாவி மக்களுக்கு எந்த தீங்கும் நேரக்கூடாது என்பதில் கவனமாக இருந்தனர் ஈழத்தில் போர் புரியும் வீரர்களுக்கு தஞ்சையில் இருந்து நெல் அனுப்பப்பட்டது, வெற்றிக் கொடியும் நடப்பட்டது.

போரில் சாகாமல், நோய்வாய் படாமல், பகைவரால் வீழ்த்த படாமல், இயற்கை எய்தியவரை “நோலாதவன்” என்பர் பழந்தமிழர், போரில் தான் உயிரை துச்சமென எண்ணி வீரமரணம் அடைந்தவருக்கு “வீரக்கல்” எடுப்பது தமிழர் மரபு,வீரகல்லுடன் தெய்வ உருவங்களை வைத்து வழிபட்டால் “பள்ளிப்படை”என்பர், தெய்வத்திற்கு நிகராய் போற்றுவர்.

( தொடரும்…)

நங்கை அவள் வீசிய
ஒற்றைப் பார்வையில்,
நாழிகை நழுவுதடி
நாட்குறிப்பு நகருதடி
அறிவாயோ நீயடி?
நோலாதவன் நானடி,
இனி எனக்கு வீரக்கல் எடுப்பதும் பள்ளிப்படை அமைப்பதும் உன் பொறுப்பு தானடி!

Leave a comment