Uncategorized

பட்டணத்து கால்நடையாய்!

அப்பாடி …
விடிஞ்சிருச்சு போலயே …ஒரே ஹாரன் சத்தமா இருக்கே! என் அம்மா சொலிருக்கா அவ பிறந்த இடத்தில் சேவல் தான் எழுப்புமாம். நான் பட்டணத்து ஆளு பிறந்தது வளர்ந்தது எல்லாம் இந்த நகரம் தான்.

அம்மா சொல்லுவா “இது நகரம் இல்ல நரகம்” மனுச பிசாசு பால் கறக்குற வரைக்கும் பத்திரமா பாத்துப்பா அதுக்கப்புறம் தேமேன்னு விட்ருவா.நான் வயிற்றில் இருந்தப்போ பொம்பள புள்ளையா பொறக்கணும்னு வேண்டினாளாம்…

இந்த மனுஷங்களை புரிஞ்சிக்கவே முடியாது மனிதத்துல பொம்பள புள்ளைங்கள கொள்ளுவார், மாட்டுல ஆம்பள புள்ளைய கொள்ளுவாங்க. என்ன ஒரு பிறவிங்க… சரி இதெல்லாம் எதுக்கு நான் உங்ககிட்ட சொல்லிட்டு இருக்கேன்… சட்டுபுட்டுன்னு இந்த கார்ப்பரேஷன் காறங்க குப்பைய அள்ளுறதுக்கு முன்னாடி நான் போய் எனக்கு சாப்பிட ஏதாவது கிடைக்குமான்னு தேடணும்.

இந்தப் பட்டணத்துல கடன் தொல்லை தாங்காமல் பூச்சி மருந்து குடிச்சு செத்துட்டான் பைத்தியக்கார முதலாளி… ரெண்டு குழந்தையையும் அனாதையாக விட்டுட்டு போயிட்டான் …நான் அப்படி இல்ல அதுங்க என் பின்னாடி ஒளிஞ்சானாட்டம் ஆடுங்க, காஞ்சகொம்புல நாகசாயம் பூசுங்க , சரியான வாளுங்க…


நான் பெத்த புள்ளைய வித்து இந்த மாட்டு பொண்ணு தன் கடன அடிச்சுட்டா இப்போ என் பாலை கரந்து புள்ளைய வாழ வைக்கிறா…சும்மா சொல்லக்கூடாது ரொம்ப தைரியம்தான் எனக்கு புல்லுக்கட்டு வாங்க நடந்து போயிட்டு வருவா, பக்கத்துல கொஞ்சம் காலியிடம் இருந்துச்சு இங்கே இப்போத அப்பார்ட்மெண்ட் கட்டுவது தான் பிரச்சனை. நான் அவ சுமையை குறைக்க கிடைக்கிறது எல்லாத்தையும் சாப்பிட்டு வைத்தநிறப்பிக்கிரேன், போஸ்டர் ,பழைய சோறு, அந்த உழவர்சந்தை பக்கம் போனா மிஞ்சின காய்கறிகள் எல்லாம் கிடைக்கும் .

ஐந்து ரூபாய் இட்லி பாட்டி கடையில மனுஷங்க கூட்டமும் என்ன மாதிரி மாடுங்க கூட்டமும் அலை மோதும். சூடான இட்லி தோசை அலுவலகம் போற பயலுக்கு, காஞ்சி போன இலை எனக்கு,குடிக்கறதண்ணீர்க்கு பஞ்சம் பாடும் இந்த ஊர்ல எனக்கு கழனித்தண்ணீர் வைக்கிற ஒரே ஆளு இட்லி பாட்டி மட்டும்தான்.

மொழுவுன தரையில குத்தவச்சி விடியங்காத்தால புட்டு சுடுவா கெழவி , அல்லாடும் வயசுல தள்ளாடும் கிழவிக்கு தட்டுல ஈ மொய்க்கிரமாறி அவ்வளவு கூட்டம் தினமும் , மிஞ்சுன சாம்பாரை இலையில நக்குறப்போ அவளோட அறுசுவை தென்படும் தெரியும்.

நகரத்துல மனுசங்க கால்ல சுடு தண்ணி ஊத்துனாப்பல அவ்வளவு ,அவ்வளவு அவரசம் படறாங்க ரோட்ட கடகரக்குள்ள மேலயே வண்டிவிடறாப்ல வருவாங்க ஒருதடவ திரும்பிமொறச்சிடேன் பைக்ல சின்னப்பொண்ணு அய்ய்ய்….. மாடுனு கைதட்டுனதுல மனசு இளகிபோய்ட்டேன் இந்த பட்டணத்து உலகத்துல ஒவ்வெருநாளும் எனக்கு ரோதனைதான் ஆன இங்க நான்மட்டும் இல்ல என்னமாரி பலபேரு சிக்கித்தவிகரா…

பட்டணத்து கால்நடையாய்!

.

6 thoughts on “பட்டணத்து கால்நடையாய்!”

Leave a reply to Raghavi Devaraj❤ Cancel reply