Read & Relax

Miss you Thayamma ♥️

அள்ளி அள்ளி கொடுத்த கை,பூநெஞ்சம் இவள்… இதுவே மெய்,

பூநெஞ்சம் இவள்… இதுவே மெய்,

விடியற்காலை முதல் பேருந்தில்

சந்தைக்குச் செல்வாள் இவள்,

காய் கனி விற்றுத் திரும்புகையில் ஓடிவிடும் நன்பகல்,

இவள் கால் படாத தோட்டம் பொழி மேடு உண்டோ?

இவள் தேநீர் ருசி அறியாத ஆட்கள் உண்டோ?

தாயம்மா… என்று அழைக்கும் முன் ஓடி வருவாள்,

பசி என்று சொல்லும் முன் இலை அறுப்பாள்,

“போய்விட்டு வரென்..” என்று சொல்லும் முன் கட்டைப்பை நிறைப்பாள்,

ஆசை என்று ஒன்று பெரியதாய் எதும் இல்லை,

வலி என்று ஒருநாளும் அழுதது இல்லை,

அன்பிற்கு இவள் மட்டுமே எல்லை,

வறுத்த கம்பு போசியில் இருக்கு,

இனி எப்போ இனிப்பு செஞ்சி ஊட்டுவாய் எனக்கு?

– Miss you Thayamma♥️

Leave a comment