Disclaimer : இந்த கட்டுரையில் வரும் நிகழ்வுகள் யாவும் கற்பனை அல்ல, வெறும் கேளிக்கையும் அல்ல.
உண்மையில் சொல்லப்போனால் நாத்திகத்திற்கும் ஆத் திகத்திற்கும் நடுவில் வாழ்ந்துகொண்டு இருக்கும் என்னைப்போல் சமகாலத்தவர்க்கு இக்கட்டுரை வாயிலாக கடுகு அளவேனும் சிந்தனையோ, கேள்வியோ எழுமானால் நான் வென்றுவிட்டேன் என்று அர்த்தம் கொள்வேன். உங்கள் மனதில் ஏதும் எழவில்லை எனில் மன்னியுங்கள், நீங்கள் காலம் கடந்து பிறந்துவிட்டீர்கள்.
சென்ற வாரம் குடும்பத்தாருடன் இறைவனை காண சென்று
இருந்தேன். விரைவில் தரிசிக்க 100 ருபாய் கையூட்டும் கொடுத்து வரிசையில் காத்திருந்தேன். இறைவன் கையூட்டு வாங்கவில்லை, அதற்கு மேல் நான் சொல்வதாயில்லை.
சரி விஷயம் அது அல்ல, விஷயம் வித்யாசம் ஆனதும் அல்ல. ஒரு 7 நபர் கொண்ட திருநங்கையர் கூட்டம் தரிசனம் முடித்து வெளியே வந்த வண்ணம் இருந்தனர் ,அமைதியாக மனதார பிராத்தனை செய்து கொன்டே… திரும்பி நான் நின்று கொண்டு இருந்த வரிசையைப் பார்த்தேன் பாலினம் பாகுபாடு இல்லாமல் அனைவர் கண்ணும் அவர்கள் மேல், அந்த திருநங்கையர் கூட்டம் மெல்ல நகரும் வரை கண் கொட்டாமல்…
தன்னை ஒதுக்கும் கூட்டத்தின் மத்தியில் மனதை ஒருநிலை படுத்தி இறைவனை ஒருவரால் உணர முடியுமானால் இங்கு உண்மையில் சபிக்கப் பட்டவர் யார்? வரம் பெற்றவர் யார்?