Poems, tamil

காதல் தீ!

நெடுநீல பயணம், நீண்டுக்கொண்டே போகும்,
கடந்து வரும் பாதை நிலை,
ஒருவித போதை அலை,
இளைப்பாற உடல் குரல் கொடுக்குது,
உன்னைக்கான கண்கள் துடிக்கிது,
பொட்டகாட்டில் பூக்கள் சிரிக்கிது,
தோகை விரித்து காகம் ஆடுது,
சாக்கடையில் காகித கப்பல் ஓடுது,
சாந்தமாய் ஆலங்கட்டி மழை பொழியுது,
எதையோ எண்ணி மனம் சிரிக்குது,
கானல்நீரில் மீன்கள் துள்ளுது,
உன்னை காண நெஞ்சம் தவிக்கிது,
பட்டாம்பூச்சி வயிற்றில் பறக்குது,
பசலைநோய் கொஞ்சம் வாட்டிவதைக்குது,
பாவாடை சட்டை எல்லாம் நீயாய் தெரியுது,
இதுவரை இல்லாத உணர்விது,
பிரபஞ்சம் அளித்த வரம் இது!

Leave a comment