இதோ அவன் பார்க்கிறான். வெறிக்க வெறிக்க, கண்கள் சிவக்க என் வருகைக்காக காத்திருக்கிறான். அவனைக்கடந்தே பேருந்து நிலையம் அடைய வேண்டும்…பயமாய் இருக்கிறது பதற்றமாய் உணர்கிறேன் நெஞ்சம் படபடக்குது… முத்து வியர்வைத்துளிகள் முந்திக்கொண்டு உருளுது. இதோ ஒரு பத்து அடி தூரத்தில் இருக்கிறான், என்னை பார்க்கிறான் , அவன் காணோட்டத்தில் நான் கொஞ்சம் வசதி உடையவளாய் தெரிகிறேன்போலும் கண்சிமிட்டாமல் ,பசியில் இரைக்கு காத்திருக்கும் முதி புலிப்போல….
இதோ நெருங்கிவிட்டேன் பதற்றத்தில் கால்கள் நடுங்குகின்றன. ஏய் மனுஷா என் அருகில் வந்து விடாதே… என்னிடம் ஏதும் இல்லை… என்னை விட்டுவிடு…
அவன் கையை உயர்த்தி இருந்தால் கத்தி கூச்சலாச்சும் போட்ருபேன். பாவி பையன் நினைத்த மாறியே சிரம் தாழ்த்தி கைக்கூப்பி தானம் கேட்டுவிட்டான்.
கொடுப்பதற்கு மனம் தவற என்னிடம் எதுவும் இல்லை என்று எப்படி புரிய வைப்பேன் அவனுக்கு!